விரதம் / நோன்பு என்பதை மேலோட்டமாகப் பார்க்குமிடத்து உணவை உண்ணாது விடுவது. இத்தகைய உண்ணாநோன்பைப் பல மதத்தினரும் கைக்கொள்ளுகிறார்கள். மதங்கள் போதிப்பதை மத அனுஷ்டானங்களாக அம் மதத்தைச் சார்ந்தவர்கள் நடைமுறைப்படுத்துகிறார்கள். மதங்கள் வேறுபட்ட தெய்வங்களை வழிபட்ட போதும்; மக்களின் மேன்மைக்கான வழிமுறைகளைக் காட்டி நிற்பதே மதம் ஆகும்.
உண்ணா நோன்பு எமக்கு உணர்த்துவனவோ பல. நோன்பு இருக்கும் போது பசி, தாகம் போன்ற உனர்வுகளை நாம் அந் நேரம் கட்டுப்படுத்துகிறோம். இவ்வாறு பசியுணர்வை அனுபவித்தால் தான் எமக்குப் பசி என்றால் என்ன என்பது புரியும். நாமே பசியின் இயல்பை அறியும் போது அதன் தாக்கம் எத்தகையது என்பதை அனுபவித்து உணர்கிறோம். இவ்வாறு உணர வைப்பதால் பசிக்கொடுமையால் வாழுபவரின் துன்பத்தை நாமும் உணருகிறோம் அல்லவா? அதன் பின்பும் பசியால் வாடுபவனுக்கு உணவளிக்காமல் இருப்போமா? இதை உணர்த்துவதே மதங்களின் உயர்ந்த நோக்கம்.
அதை விடுத்து, நாம் உண்னாமல் பட்டினி கிடந்தால் ஆண்டவன் அள்ளிக் கொடுப்பான் என எண்னுவது எத்தனை மடமை! இதையே யுகக்கவி பாரதியும் ‘தனி ஒருவனுக்கு உணவில்லையேல் இந்த ஜெகத்தினையே அழித்திடுவோம்’ என ஆவேசமாக ஆர்ப்பரித்தான். உணவில்லாதவர் படும் துன்பத்தை மத அனுஷ்டானமாக நாசுக்காக நம்மை உணர வைப்பதல்லவா மதம்! இதுதான் மதம் மனிதனை மனிதனாக்கும் யுக்தியோ?
விரதம் அல்லது உண்ணா நோன்பு எம்மை பசி என்றால் என்ன என்பதை மட்டும் உணர வைக்கிறதா? இல்லை, எமது உடலையும் மனதையும் திடப்படுத்துவது இந்த நோன்பு. அதன் மூலம் எமது சிந்தையும் உடலும் கட்டுக்குள் கொண்டுவரப்படுகிறது. இதனால் நாம் திடசித்தம் பெறுகிறோம்.
நோன்பு / விரதம் என்பது நாம் களைத்து, சோர்ந்து உட்கார்ந்து விடுவதல்ல. எமது நாளாந்த வேலைகளை நோன்பின் போதும் நாம் உற்சாகமாகக் கவனிக்க வேண்டும். நாம் விரதம் இருக்கிறோம் எனப் பிறரிடம் கூறி அவர்களின் அனுதாபத்தை பெறுவதற்கல்ல நோன்பு. உற்சாகத்துடன் மிளிரவே நோன்பு. இதுவே எமக்குத் திடத்தைத் தருவது.
மத அனுஷ்டானம் என்பது மனதுக்கும் உடலுக்கும் சேர்ந்து திடமளிப்பது. உண்ணாமல் இருப்பதால் உடல் பல நன்மைகளைப் பெறுகிறது. எமது வாயில் இருந்து உடலின் அனைத்து சீரணிக்கும் சீரன உறுப்புகள் யாவும் ஓய்வு எடுக்கும் போது அதன் மூலம் உடல் புத்துயிர் பெற முடிகிறது. உணவு எமக்கு ஊட்ட சக்தியை வழங்கும் அதே நேரம் கழிவுப் பொருட்களும் அதனுள் உண்டு. இதுவே மலசலமாகவும் வியர்வையாகவும் வெளியேறுகிறது. இருந்த போதும் எமது உள் உறுப்புக்கள் இவ்வாறான வேண்டாதவற்றையும் அவ்வப்போது தம்முள் உறிஞ்சிக்கொண்டே இருக்கின்றன. எமது உபவாசத்தால் இத்தகைய அசுத்தமும் நீங்க வாய்ப்புண்டு.
எமது உடலில் உள்ள ஒவ்வொரு அணுக்களும் தானியங்கி நமக்குச் சக்தியை வழங்குகிறது. தொடர்ந்து அவை பெறும் ஊட்டம் அவற்றுக்கு அதிகப்படியாகும் ஆபத்தும் உண்டு. இதனால் உபவாசம் இத்தகைய ஆபத்தில் இருந்து உடலைப் பாதுகாக்கும் செயலையும் செய்கிறது எனில் மிகையாகாது.
அது மட்டுமா? உபவாசத்தின் போது எமது உடலின் வேண்டாத நிறை குறையவும் வாய்ப்புண்டு. இரத்த அழுத்தம் சீரடையும். கொலஸ்ரோல் மற்றும் சீரான தூக்கமின்மை, இருதய நோய், சுவாசக் கோளாறுகள், ஜீரணக் கோளாறு, பாரிசவாதம் போன்றவை வராது எமது உடலைச் சீராக வைத்திருக்கவும் இவ்வகை நோன்புகள் / விரதங்கள் / உபவாசங்கள் உதவும். மொத்தத்திலே உபவாசம் என்பது வாழ்வை வளம் படுத்தும். இன்னும் என்ன யோசினை? வெகு விரைவில் நாம் உண்ணா நோன்பைக் கைக்கொள்ளலாம்.
மகாத்மா காந்தி பல நோக்கங்களை அடைவதற்கு; சாதிப்பதற்கு உண்ணா நோன்பை அனுஷ்டிப்பது வழக்கம். இதனால் அவர் உடல் நிலை மிக மோசமாகப் பாதிக்கப்பட்டதும் உண்டு. அவருக்கு உண்ணா நோன்பு ஓர் ஆயுதமே. தான் நேர்மையாகச் சரி என எண்ணுவதை சாதிப்பதற்கு இவர் பட்டினி கிடக்கத் தொடங்கி விடுவார். இவரே அரசியல் காரனங்களுக்காக உண்ணா நோன்பு அனுஷ்டித்த முதல் பிராகிருதியாக இருக்க வேண்டும்.
போர் என்பது மற்றவர்களைத் தாக்குவது; அழிப்பது. அதனைச் செய்யாது சாத்வீகப்போராட்டத்தால் தன்னைத் தானே வருத்தி மற்றவர்களை மசிய வைப்பது மகாத்மாகாந்தியின் அரசியல் போராட்ட பாணியாக இருந்தது. இதில் அவர் வல்லவராக விளங்கினார்.அவரது சத்தியாக்கிரகம் என்ற ஆயுதம் உலகையே வியக்கவைத்தது.
தன் நாட்டு மக்களிலே அன்பு கொண்ட மகாத்மாகாந்தி எப்பொழுதும் தான் உண்ணும் உணவு பற்றி மிக மிக அவதானமாக இருப்பார். அதிகப்படியாக உண்ணுவதை; பிறிதொரு மனிதன் உண்டு பசியாறக் கூடிய உணவை தான் உண்டுவிடக் கூடாது என அவர் எப்போதும் எண்ணினார். ஒரு வாழைப்பழத்தை உண்டால் அது ஒரு நேர உணவுக்குச் சமனானது, அதனால் ஒரு வாழைப்பழத்தை உண்டால் வேறு எதுவும் உண்ணத் தேவை இல்லை என்ற எண்ணம் உள்ளவராக அவர் இருந்தார்.
இயற்கை வைத்திய முறை உணவு உண்ணாமல் சில நாட்கள் இருக்க வேண்டும் என்ற சிந்தனையை உடையது. நான் இந்திய கர்நாடக மானிலத்தில் ஓர் இயற்கை வைத்திய நிலையத்தில் சில நாட்கள் தங்கி இருந்தேன். இங்கு முதலிலே அந்த வைத்தியர் என்னைக் கேட்டது 3 நாட்கள் உண்ணாமல் இருக்க முடியுமா என்பதே! முயன்று பார்க்கிறேன் என்றேன். அவ்வாறு இருக்கும் மூன்று நாட்களும் நீத்துப் பூசணிச் சாறு வழங்கப்பட்டது. அதுவும் 3 நேரம் மட்டுமே. மற்றம்படி பச்சைத்தண்ணீர் மட்டும் தான். ஆனால் அந்த மூன்று நாட்களும் எனது உடல் களைப்பையோ சோர்வையோ உணரவில்லை. காலையும் மாலையும் யோகாசனப் பயிற்சி செய்தேன். நான்காம் நாள் திரும்பவும் வைத்தியர் என்னை மேலும் 2 நாட்கள் உண்ணாமல் இருக்க முடியுமா எனக் கேட்டார். இது எனக்கு ஒரு பிரச்சினையாக இல்லை; தொடர்கிறேன் என்று கூறினேன். 5ம் நாள் இரவு எனக்கு நல்ல காச்சல் வந்தது. எனது உடலில் உள்ள அசுத்தங்கள் எல்லாம் வெளியேறுகிறது என்றார்கள்.
இயற்கை வைத்தியம் இயற்கையோடிணைந்த எமது உடலை இயற்கை இயல்புகள் மூலமாகவே சீர் செய்வது. உண்ணாது இருக்கும் போது எமது உள் உறுப்புக்கள் ஓய்வு பெறுவதுடன் பலகாலமாக நாம் உண்ட உணவின் மூலம் சில அசுத்தத் தன்மையும் எமது உடலில் தங்கி எமது உடல் நலத்தைக் கெடுக்கிறது. இவ்வாறு உண்ணாது இருந்து, நீர் மட்டுமே அருந்துவதால் எமது உடல் இயற்கையாகவே சுத்தப்படுத்தப்படுகிறது. இந்தத் தத்துவத்தின் அடிப்படையிலேயே உலக மதங்கள் யாவும் உண்ணா நோன்பைப் போதிக்கின்றன.
நீங்களும் முயன்று பாருங்கள். உங்கள் உடல் சீரடைவதை நீங்கள் உணரலாம்.
( இக் கட்டுரை ATBC வானொலியில் ‘பண்பாட்டுக் கோலங்கள்’ என்ற நிகழ்ச்சியில் 20.10.10 அன்று ஒலிபரப்பாகியது.)
Sunday, February 03, 2019
Friday, February 01, 2019
அரங்கேற்றங்கள்
இன்று தமிழர்கள் வாழும் நகரங்கள் அனைத்திலும் அரங்கேற்றங்கள் நடைபெறுகின்றன. தமிழரின் கவின் கலைகள் எனப் போற்றப்படும் நடனம், வாய்ப்பாட்டு, வாத்தியங்களான புல்லாங்குழல், மிருதங்கம், வீணை போன்றவற்றைக் கற்றுக் கொண்ட இளைஞர்கள், யுவதிகள் தனித்து ஒருவராக மேடையேறி தமது திறமையை வெளிப்படுத்துவது அரங்கேற்றமாகிறது.
அரங்கேற்றம் என்ற சொல் அரங்கத்தில் ஏறுவது எனப் பொருள் படும். ஒரு கலைஞர் தனித்து இயங்கக் கூடிய திறமையைப் பெற்றதும் அத் திறமையைச் சபையோருக்கு எடுத்துக் காட்டுவதே அரங்கேற்றமாகிறது. ஆக மொத்தத்தில் ஒரு கலைஞன் உருவாகி இருப்பதை எடுத்துக் காட்டுவதே அரங்கேற்றம் என்ற சடங்காகும்.
இந்தமாதிரியான அரங்கேற்றங்கள் எமது தந்தையர் காலத்திலோ அல்லது எமது பாட்டனார் காலத்திலோ நடைபெற்றதாக நாம் அறியவில்லை. ஆமாம், இந்த வளர்ந்து வரும்; மாறிவரும் நாகரிகத்தின் ஓர் அங்கமே அரங்கேற்றம்.
முன்பெல்லாம் தொழில்கள் யாவும் ஜாதி அடிப்படையிலே நடந்து வந்தன. ஆடல் மற்றும் இசைத்தொழிலும் இவ்வாறே ஜாதி அடிப்படையில் நடந்தது. இந்தக் கவின் கலைகளை வளர்ப்பதற்கு இசை வேளாளர் என ஒரு சமூகத்தினர் இருந்தார்கள். இவர்களே இந்தத் தொழிலை பரம்பரை பரம்பரையாகச் செய்து வந்தனர். இவர்களை ஊர் வழக்கில் ‘நட்டுவர்’ என அழைத்தனர். இலங்கையைப் பொறுத்தளவில் இவர்கள் நாதஸ்வரம், தவில் போன்ற வாத்தியத்தை வாசித்து வந்தார்கள்.
ஆனால் எமது கலைகளின் இருப்பிடமான தென்னிந்தியாவிலே இசை வேளாளர் பரம்பரையில் சிலர் நாதஸ்வரக் கலையை வளர்த்தனர். வேறு சில குடும்பங்கள் நாட்டியத்திலே சிறந்து விளங்கினார்கள். இந்தியச் சுதந்திரப் போராட்ட காலம் வரை இந்த நட ன நங்கையர் கோயில்களிலே ஆடி வந்தார்கள். இவர்களுக்குக் கோயில்களிலே பல்வேறு கடமைகள் இருந்தன. கொடிஸ்தம்பத்தின் முன் ஆடுவது, சுவாமி புறப்பாட்டின் போது ஆடுவது, சுவாமி ஊர்வலம் வரும் போது ஆடி வருவது போன்ற பல கடமைகள் அவர்களுக்கு விதிக்கப்பட்டிருந்தன. இவர்கள் தேவ தாஸிகள் என அழைக்கப்பட்டனர்.( தேவ = இறைவன், தாஸி= அடிமை. ) நாதஸ்வரக் கலைஞர்களின் கடமைகள் போன்றே அன்றும் இவைகள் நடனத்துக்குக் கடமைகளாக விதிகள் வகுக்கப்பட்டிருந்தன. ஓதுவார்கள் தேவாரங்களைப் பாடி இறைவனின் புகழைப் பாடுவார்கள். ஆடல் நங்கையரோ இறைவனின் மேன்மைகளை ஆடல் மூலம் வெளிப்படுத்தினர். அதற்காகக் கோயில் இவர்களுக்கு மானியம் கொடுத்து வந்தது.
இப்படியான ஆடல் நங்கையர் கோயில்களில் ஆடுவதுடன் இவர்களின் கடமை முடிந்து விடவில்லை.அரச சபைகளிலும் இவர்களின் நாட்டியங்கள் இடம்பெற்று வந்தன. கவிஞர்களையும் புலவர்களையும் ஆதரிப்பது போன்றே அரசன் ஆடல் கலைஞர்களையும் போஷித்து வந்தான்.
இவ்வாறாக, ஆடல் கலையில் சிறந்து விளங்கிய கலைஞர்களுக்கு அரசன் பரிசில்கள் வழங்கினான். உறவாக்கி நல்லூர் என்ற கிராமம் அரசனால் உறவாக்கி என்ற ஆடல் நங்கைக்கு கொடுக்கப்பட்டதாகக் கல்வெட்டு ஒன்று சான்று பகர்கிறது.
அன்றய சமுதாயத்திலே குடும்பப் பெண்ணானவள் ஆடல் பாடல் எதுவும் தெரியாதவளாகவே இருந்தாள். ஏன் கல்வியறிவு கூட அற்றவளாகவே விளங்கினாள். இவற்றை அறிந்திருப்பது இல்லாளுக்கு அழகல்ல எனக் கருதிய காலம் அது. ஆனால் இந்த ஆடல் நங்கையரோ கல்வி, கேள்விகளில் சிறந்தவர்களாக; கீதங்கள் பாடுவதிலும் வாத்தியங்கள் இசைப்பதிலும் நிருத்தம் ஆடுவதிலும் சிறந்து விளங்கினர். இத்தகைய நங்கையர் அரசன் முதற்கொண்டு உயர் வர்க்கத்தினரின் ஆசை நாயகிகளாகவும் இருந்தனர்.
அன்றய சமுதாயக் கட்டுக்கோப்பில் இது ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒன்றாகவே விளங்கியது. இந்த ஆடல் நங்கையருக்கு அன்று சமூகத்திலே போதியளவு செல்வாக்கும் அந்தஸ்தும் கூட இருந்தது.
இப்படியான ஆடல் நங்கை ஒருத்தியே சிலப்பதிகாரத்தில் வரும் பாத்திரமான மாதவி. மாதவியின் ஆடல் அரங்கேற்றம் அரசனின் முன்னிலையில் நடந்ததாகச் சிலப்பதிகாரம் கூறுகிறது. கி.பி. 4ம் நூற்றாண்டு எனக் கொள்ளப்படும் சிலப்பதிகார காலத்திலே அரங்கேற்றம் என்ற சொல் வருகிறது. இதில் ஆடல் நங்கையான மாதவி அரங்கேற்றத்தின் பின் தனது தொழிலை ஆரம்பிக்கிறாள்.
இந்திய சுதந்திரப்போராட்டத்தின் பின் ஏற்பட்ட மறுமலர்ச்சியால் தாஸி குலத்தைச் சாராத பிற குலத்தினரும் நாட்டியத்தை ஆடி அரங்கேற்றம் செய்கிறார்கள். இத்தகைய அரங்கேற்றங்கள் தொழில் முறையில் தாம் கற்ற கலையைப் பயன் படுத்தி கலைவளர்க்க உதவுகின்றன.
எமது இலக்கியச் செல்வமான சிலப்பதிகாரத்திலே மாதவிக்கு அரங்கேற்றம் நடந்ததாகக் கூறப்படுவதால் அன்றும் இந்த அரங்கேற்றங்கள் வழக்கில் இருந்ததை அறிகிறோம். ஆனால், இசை வாத்தியக் கலஞருக்கு அரங்கேற்றம் அன்று நடந்தமைக்குச் சான்றுகள் கிடையா.
இன்று முன்னணியில் நிற்கும் ஆடல் கலஞர் யாவரும் மாதவியைப் போன்று அரங்கேற்றம் செய்தவர்களே. ஆனால் முன்னணிப் பாடகர்கள் மற்றும் வாத்தியக் கலைஞர்கள் யாவரும் அவ்வாறு அரங்கேறி முன்னணிக்கு வந்தவர்களல்லர். இவர்கள் சபாக்களிலே இளம் கலைஞர் வரிசையில் பாட வந்து தமது திறமையால் உயர்நிலைக்கு வந்தவர்கள்.
நித்தியஸ்ரீ, செளமியா, உன்னிகிருஷ்ணன் போன்று முன்னணியில் நிற்கும் இளம் இசைக்கலைஞர்களும் சரி முன்னாளில் பிரபலமான டீ.கே. பட்டம்மாள், எம்.எஸ். சுப்புலக்ஷ்மி, செம்மாங்குடி போன்ற பெரிய வித்துவான்களும் சரி அரங்கேற்றம் செய்யாது முன்னணிக்கு வந்தவர்களே. வாத்தியக் கலைஞர்களும் அவ்வாறே! இசைக்கலைஞர்களுக்கு அரங்கேற்றம் செய்யவேண்டும் என்ற கட்டாயம் அன்று இருக்கவில்லை.
ஆனால், ஆடல்கலைஞர்களின் கதை அரங்கேற்றத்திலேயே ஆரம்பமாகிறது. ஆடல் கலைஞர் ஒருவர் முன்னணிக்கு வரவேண்டுமானால் அரங்கேற்றம் செய்யவேண்டும் என்ற கட்டாயம் உண்டு. வெளிநாடுகளில் மாத்திரமன்றி தமிழ்நாட்டிலும் இத்தகைய நிலைமையே இன்றும் உள்ளது.
இங்கு எமது பெண்கள் பலர் அரங்கேற்றம் முடிந்ததும் பெரும்பாலாக ஆடுவதை நிறுத்தி விடுகின்றனர். அரங்கேற்றத்தில் தான் ஒரு கலைஞர் உருவாகிறார் என்றால் அரங்கேற்றத்தின் பின் தான் கற்ற கலையை விருத்தி செய்யாது விடுவது கருவிலேயே சிதைந்து போன நிலை தான்.அரங்கேற்றம் என்பது Car Driving இல் ’P’ License கிடைத்த மாதிரித் தான். ஆனால், மேலும் பல வருடங்கள் Car ஓட்டும் போது தான் நீங்கள் தேர்ந்த திறமையுடைய Driver ஆக முடியும். அதே போல பலவருடங்கள் நீங்கள் கற்ற கலையைப் பயிற்சி செய்யும் போது தான் அந்தக் கலையின் நுணுக்கங்களை எல்லாம் அறிந்து அதை விரிவு செய்ய முடியும்.
( இக்கட்டுரை ATBC வானொலியில் ‘பண்பாட்டுக் கோலங்கள்’ என்ற நிகழ்ச்சியில் 13.4.2005 அன்று ஒலிபரப்பாகியது.)
மாமல்லபுரத்துச் சிற்பங்கள்
சுனாமி அனர்த்தத்தினால் ஏற்பட்ட அழிவுகள் யாவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இதன் பாதிப்புக்கு உள்ளாகிய நாடுகள் அதனால் ஏற்பட்ட அழிவில் இருந்து தம்ம நிவர்த்திக்க முனைந்து கொண்டிருக்கின்றன. இந்தப் பேரழிவு உலகத்தையே சோகத்தில் ஆழ்த்திய போதும் சில புதிய தகவல்களும் எமக்குக் கிடைக்கின்றன.
அண்மையிலே வெளிவந்த ஒரு செய்தி எம்மை வியப்புக்குள்ளாக்கியது. சென்னைக்கு அருகில் உள்ல மகாபலிபுரம் என்னும் கடற்கரை கடல் அனர்த்தம் ஏற்பட்ட சமயத்தில் 100 மீற்றர் வரை உள்வாங்கியதாம். இவ்வாறு உள்வாங்கிய சமயத்தில் மகாபலிபுரத்துக் கடலுக்குள் பல சிற்பங்களைக் காணக்கூடியதாக இருந்ததாம்.
இது வரை இப்படியாகக் கடலின் அடியில் இருந்த சிற்பங்கள் யாராலும் கண்டறியப்படவில்லை. இவ்வாறு ஒரு சுனாமி ஏற்பட்டிராவிட்டால் மேலும் பலகாலம் இது யாரின் கண்ணிலும் பட்டிருக்காது. சுனாமி அனர்த்தத்தின் போது இதைக் கண்டதால் தற்போது இவை பற்றி அறிவதற்கு தொல்பொருள் அகழ்வாய்வாளர்களும் கடற்படையினரும் ஆய்வில் மூழ்கியுள்ளதாக அறிகிறோம். இந்த ஆய்வு எத்தனை வியப்பான செய்திகளை அளிக்குமோ என ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.
உங்களில் பலர் இந்த மாமல்லபுரத்திற்குப் போயிருக்கலாம். இந்தக் கடற்கரைக்கு அருகாமையில் உள்ள சிற்பங்களைக் காண்பதற்குப் பலர் போவது வழக்கம். இன்று தமிழரின் நாகரிகச் சின்னமாக உயர்ந்து நிற்கும் கோயில்கள் கட்டுவதற்கு இந்த இடம் தான் பயிற்சிக்களமாக அமைந்தது. சிற்பிகள் தாம் அமைக்கப் போகும் சிற்பவடிவங்களை இங்கு காணும் பெரிய பாறாங்கற்களிலே செதுக்கிப் பழகினார்கள். இங்கு 5 இரதம் போன்ற வடிவங்களைக் காணலாம். இதைப் பாண்டவர் இரதம் என்பார்கள். இதுவே கல்லிலே எப்படிக் கோயில் அமைப்பது என்ற எண்ணத்தை உருவகப்படுத்திப் பார்த்ததாகக் கருதப்படுகிறது.
வேறு சில கற்கள் குடையப்பட்டு அதற்குள் சிற்பவடிவங்களைக் காணக்கூடியதாக உள்ளது. ஒரு பெரிய கல்லிலே குரங்கு பேன் பார்ப்பது போன்ற காட்சி. அதை அடுத்து அர்ச்சுணன் தவம் செய்வது போன்ற காட்சி. இது யாவரையும் கவர்ந்தது. தவம் செய்யும் சிற்பக்காட்சியில் அர்ச்சுணன் ஒற்றைக்காலிலே நிற்கிறான். நீர், ஆகாரம் எதுவுமில்லாமல் அவன் தவம் செய்வதால் அவனது விலா எலும்புகள் யாவும் புடைத்து தாடியுடன் அச் சிற்பம் கானப்படுகிறது.
நான் சென்னையில் படித்த காலகட்டத்திலே மாமல்லபுரம் இன்று இருப்பது போல அல்லாமல் அதை அடுத்து அருகாமையில் புல்லும் புதருமாகக் காணப்பட்டது. அங்கெல்லாம் நந்தி வடிவில் அமைந்த சிலைகள் விரவிக் கிடந்தன. சில முழுமை பெற்றிருக்கும் சில முழுமை பெறாது பாதியிலே நிறுத்தப்பட்டிருக்கும். ஆம், இவை யாவும் சிற்பக்கலை கற்றுக் கொண்ட மாணவர்களது கைவண்ணம் என்பது இவற்றைப் பார்த்தவுடனே புலனாகும். தற்போது அவை யாவும் சேகரிக்கப்பட்டு ஒழுங்காக வைக்கப்பட்டுள்ளன.
இன்று சிற்பிகளுக்கான அரச கலைக்கல்லூரி மாமல்லபுரத்துக்கு அருகாமையிலேயே அமைக்கப்பட்டுள்ளது. இந்தச் சிற்பங்கள் குறித்த சிந்தனைகலோடு அமைவாக கோயில்கள் தமிழ்நாட்டில் எப்போது கட்டப்பட்டன என்ற எண்ணம் எமது மனதில் தோன்றுவது இயல்பு. பல்லவ அரசர் காலத்திலேயே (கி.பி.300 - 900) கோயில் கட்டும் கலை உருவானது. குறிப்பாகக் கூறுவதானால் மகேந்திரவர்மன் காலத்திலேயே இது தொடங்கப்பட்டது எனலாம்.
இது பக்தி இயக்கம் வளர்ந்த காலம். சமணப்பள்ளிகளுக்கும் பெளத்த விஹாரங்களுக்கும் எதிராக சைவ வைணவ பக்தி இயக்கம் போர் தொடுத்தது. இந்த சமயத்திலே பக்தி நெறியை வளர்க்க கோயில் வழிபாடு இன்றியமையாததாக கருதப்படலாயிற்று.
சிவனை லிங்க முறையில் வழிபடுவது இந்தியா பூராகவும் இருந்தது. ஆனால் சிவனை நடராஜ மூர்த்தியாக வழிபடும் முறை தமிழ் நாட்டிற்கே உரியது. தெய்வங்களுக்கும் நடனத்திற்கும் இருந்த உறவால் நடன உருவங்கள் பல கோயிகளில் அமைக்கப்பட்டன. இதனால் நடனத்தைப் போலச் சிற்பக்கலையும் ஒரு லலித கலையாக வளரத்தொடங்கியது. சிற்பங்கள் அழகுற அமைக்கப்பட்ட கோயில்களே சகல கலைகளையும் வளர்க்கும் இடமாக இருந்தன. இதனால் கோயில்கள் அழகிய சிலைகளுடன் கூடிய கலா மண்டபங்களாக காட்சியளித்தன. அழகிய நடன மங்கையரின் உருவங்களும் சிற்பவடிவு பெற்றன. பண்டைய ஆடற்கலையின் சிறப்பை நாம் இந்தச் சிற்பங்கள் மூலம் அறியக்கூடியதாக உள்ளது.
இந்த வகையில் சிதம்பரம் தலத்தின் கோபுரச் சிற்பங்கள் முதன்மை பெற்றவை. இங்கு காணப்படும் மேற்கு கோபுர வாயிலில் 93 நாட்டிய நிலைகள் செதுக்கப்பட்டுள்ளன. 13ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இக் கோபுரம் அந்தக் காலத்தில் ஆடற்கலைக்கு அளிக்கப்பட்ட சிறப்பை எடுத்தியம்புகிறது..
இவ்வாறு, தென்னகம் முழுவதும் விரவிக் கிடக்கும் கோயில்கள் அன்று சிற்பக்கலைக்கு அளித்த முக்கியத்துவத்தை எடுத்துக் காட்டுவனவாக உள்ளன. இந்த அழகிய சிற்பங்கள் தமிழனை நாகரிகத்தில் உயர்ந்த ஒரு சமுதாயமாக உலக அரங்கில் நிலைநிறுத்த உதவுவன எனில் அது மிகையில்லை.
மாமல்லபுரத்துச் சிற்பங்கள் பற்றிய ஓர் உண்மையை மீண்டும் வலியுறுத்த விரும்புகிறேன். யான் சென்னையில் படித்த காலத்தில் இன்றுபோல் சுற்றுலாத்துறை பெரிதாக வளர்ந்திருக்கவில்லை. பலரும் சென்னையில் உள்ள தமது நண்பர்களின் தயவில் தான் பலவற்றையும் சென்று பார்ப்பது வழக்கம். நான் அங்கு இருப்பதன் துணிவில் எனது நண்பர் ஒருவர் சென்னைக்கு முதன் முறையாக வந்தார். எனது கணவரின் பல்கலைக்கழகத் தோழனான அவர், திரைப்பட காட்சி எடுக்கும் இடத்தைப் பார்க்க விரும்பினார். அதனால் எனது குருவின் சிபாரிசில் AVM studio க்கு அவரை அழைத்துச் சென்று காட்டினேன். பின்னர் மாமல்லபுரத்துக்குப் போனோம். அச் சிற்பங்களைப் பார்த்த நண்பர், ‘என்ன கார்த்திகா, சும்மா கற்பாறைகளாகத் தெரிகிறது’ எனச் சப்புக் கொட்டினார். யாவுமே பொய் என்பதை வலியுறுத்துவதற்கு எனக்கு வேதாந்திகள் சொல்லும் இரு வரிகள் தான் அன்றைக்கு ஞாபகத்துக்கு வந்தன. அது,
‘மரத்தை மறைத்தது மாமத யானை
மரத்தில் மறைந்தது மாமத யானை’
என்ற வாசகம் தான் அது.
அதாவது மரத்தையே நோக்கிக் கொண்டிருப்பவனுக்கு அதில் செதுக்கியுள்ள யானையின் உருவம் தெரிவதில்லை. மறுபுறத்தில் யானைச் சிற்பத்தையே நோக்காகப் பார்த்துக்கொண்டிருப்பவனுக்கு அது செதுக்கப்பட்ட மரம் தெரிவதில்லை என்பது அதன் உள்ளார்ந்த அர்த்தமாகும்.
இது போலவே எனது நண்பருக்கும் மாமல்லபுரம் பூராவும் கற்களாகவே தென்பட்டது போலும்! ஆனால் எனது நண்பர் அழகியற்கலைகளில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். ஆயினும் தனக்குத் தோன்றியதை அவர் ஒழிவு மறைவின்றி கூறுவதில் அவர் மன்னர். ஆயினும் இவர் ஏன் இவ்வாறு கூறினார் என நான் வினா எழுப்பத் தொடங்கினேன். வீடு திரும்பியவுடன் எனது கார்டியனான அரிஞர் கண. முத்தையா அவர்களிடம் நடந்ததைக் கூறினேன்.
‘ஆம் கார்த்திகா, உனது நண்பர் கூறியதிலும் ஓர் உண்மையுண்டு. மாமல்லபுரத்துச் சிற்பங்களும் அவை அங்கொன்றும் இங்கொன்றுமாக இருக்கும் முறையும் கோயில் சிற்பக்கலையின் தொடக்க காலத்தைக் காட்டுகிறது’ என அவர் விளக்கினார்.
ஆகவே, சிற்ப வரலாற்றுக் துறைக்கு மாமல்ல புரத்துச் சிற்பங்களும் வேண்டியவையே! ஆகவே தான் அவையும் பேணிப்பாதுகாக்கப் படுகின்றன போலும்!
( இக் கட்டுரை ATBC வானொலியில் ‘பண்பாட்டுக் கோலங்கள்’ நிகழ்ச்சிக்காக ..........அன்று ஒலிபரப்பானது.)

Thursday, January 31, 2019
இந்தியாவில் பார்சி இனத்தவர்
இன்று மக்கள் தாம் பிறந்து வளர்ந்த பொன்னாட்டை விட்டு பிற நாட்டில் வாழ்வது சகஜமாகி விட்டது. இவ்வாறு பிறநாட்டில் போய் வாழ்வதற்கப் பல காரணங்கள் உண்டு. பிறநாட்டில் வசதியான வாழ்வைத் தேடிப் போகிறவர்கள் உண்டு. அதே சமயம் நாட்டில் ஏற்படும் போர் முதலான நெருக்கடி நிலைமைகளால் தம் சொந்த நாட்டில் வாழ முடியாத சந்தர்ப்பத்தில் பிறநாடுகளில் தஞ்சம் புகுவாரும் உண்டு.
இந்தியப் பெருங்கண்டத்தில் இப்படித் தஞ்சம் புகுந்தவர்கள் தான் பார்சி எனப்படும் இனத்தவர். இவர்கள் அன்று பேர்ஷியா எனப்பட்ட பாரசீகத்தில் இருந்து இந்தியாவுக்கு தஞ்சம் கேட்டு வந்தவர்களே!
இவர்கள் யார் என உங்களுக்கு மேலும் தெரிய வேண்டுமா? இந்தியக் கண்டத்தின் பிரதமராக இருந்து மறைந்த இந்திரா.காந்தியின் கணவர் Feroze Gandhi ஒரு பார்சி இனத்தவரே. இவர்கள் நெருப்பைத் தெய்வமாக வழிபடுபவர்கள். வழிபாட்டிற்காக நெருப்பை ஏற்றினால் அதனை அணைக்கக் கூடாது என்ற நம்பிக்கை உடையவர்கள். பண்டைய கிரேக்கர்களிடமும் இத்தகைய நம்பிக்கை இருப்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
இந்த பார்சி மக்கள் கப்பலில் ஏறி இந்தியக் கண்டத்தை அடைந்து அங்கு தஞ்சம் கோரிய போது அன்று அந் நாட்டை ஆண்ட மன்னன் தஞ்சம் தர மறுத்தானாம். இதற்கு உதாரணமாக ஒரு பாத்திரத்தில் பாலை இராஜகுரு அவர்களின் முன் வைத்தார். அதன் அர்த்தம் எமது சமுதாயம் பால் போன்றே தூயதாக உள்ளது; இதை நாம் மாசுபடுத்த விரும்பவில்லை என்பதாகும். பிற நாட்டவர் எம்முடன் கலப்பதை நாம் விரும்பவில்லை என்பது அதில் பொதிந்திருந்த உள்ளர்த்தமாகும்.
அதற்குப் பதிலாகக் கப்பலிலே வந்த பார்சிகள் குருவானவரின் பாலில் ஒரு கரண்டி சக்கரையைக் கலந்தனராம். அதன் அர்த்தம் பாலில் சக்கரை கலந்தது போல் உங்களுடன் இனிமையாக நாம் கலந்து வாழ்வோம் என்பதாகும்.,
உடனே அவர்களுக்குத் தஞ்சம் புக இடம் கொடுக்கப்பட்டது. ஆனாலும் அவர்களுக்கு ஒரு நிபந்தனை விதிக்கப்பட்டது. அது என்னவெனில், எந்த ஒரு பார்சி இனத்தவரும் தமது சமயத்தை இந்த மண்ணில் பிரசாரம் பண்ணி மக்களை மதம் மாற்ற முற்படக் கூடாது என்பது அந் நிபந்தனையாகும். அதற்கமைய இந்திய பார்சி இன மக்கள் எவரும் தமது மதத்தை இன்றுவரை பரப்ப முற்படுவது கிடையாது.
இவர்கள் இறந்ததும் உடலை எரிப்பதோ புதைப்பதோ கிடையாது. மாறாக, இறந்தவரின் உடலை உயர்ந்த ஒரு கோபுரத்தில் கொண்டுபோய் வைப்பார்கள். அந்த இடத்தை ‘டாக்மா’ அல்லது Tower of Silence என அழைக்கிறார்கள். கழுகுகளுக்கு அவ் உடல் இரையாகும். இச் செய்கையை அவர்கள் வாழ்க்கையின் கடைசித் தானம் எனக் கருதுகின்றனர். இதற்காக இந்தியாவில் பெரிய நகரங்களிலே உயர்ந்த பெரிய கோபுரங்கள் உண்டு. இந்தப் பழக்கம் இவ் இனத்தவரால் இன்றும் கைக்கொள்ளப்பட்டு வருகிறது. இலங்கையின் தலைநகரான கொழும்பிலும் வாழும் பார்சி இனத்தவருக்காக இது போன்ற கோபுரம் ஒன்று உண்டு.
இந்திராகாந்தியின் கணவர் Feroze Gandhi பார்சிக் காரராக இருந்தும் தனக்கு அத்தகைய சம்பிருதாயம் வேண்டாம் எனக் கூறி இருந்ததால் அவரின் உடல் தகனம் பண்ணப்பட்டது.
மதத்தாலும் மொழியாலும் வேறுபட்டாலும் இந்தியா என்ற பெரிய சாகரத்தில் இவர்களும் இந்தியர்களாகக் கலந்து விட்டார்கள். அண்மையில் எனது நெருங்கிய உறவினர் ஒருவரின் பெண் பார்சி இன இளைஞனைத் திருமணம் செய்து கொண்டாள். இந்த இளைஞனின் பெற்றோர் இந்து முறைப்படி தீ வலம் வந்து திருமணம் செய்ய விரும்பவில்லை. தீயை அவர்கள் தெய்வமாக வழிபடுவதால் தீவலம் வந்து திருமணம் செய்வது அவர்கள் சம்பிருதாயத்தில் ஏற்புடயதாக இருக்கவில்லை.
( இக்கட்டுரை ATBC வானொலியில் ‘ பண்பாட்டுக் கோலங்கள்’ என்ற நிகழ்ச்சிக்காக ...........அன்று ஒலிபரப்பாகியது)

மாகாளியின் அறைகூவல்
இன்றய காலத்திலே யுனெஸ்கோ நிறுவனம் சிறுவர் தினம் என நவம்பர் 20ம் திகதியை சிறுவர்களுக்காக ஒதுக்கி உள்ளது. சிலகாலங்களின் முன்பு வரை பல நாடுகளிலே சிறுவர்களைக் கொண்டு பெரிய தொழில்சாலைகளில் வேலை வாங்கி குறைந்த ஊதியம் கொடுப்பது வழக்கமாக இருந்தது. மற்றும் சிறுவர்களுக்குக் கல்வியறிவு வழங்கப்படாமையும் காணப்பட்டது. குறிப்பிட்ட சிறுவர் தினத்தில் உலக நாடுகள் சிறுவர்கள் நலச் சேவைகள் குறித்த விடயங்களில் அதிக கவனத்தைச் செலுத்தி அவர்களின் மேம்பாடு, அபிவிருத்தி, நலச்சேவைகள் பற்றி அலசி ஆராய்ந்து முடிவுக்கு வர இச் சிறுவர்தினப் பிரகடனம் பயனுடயதாக இருக்கிறது.
அதே போன்று பெண்கள் தினமும் உண்டு. மார்ச் மாதம் 8ம் திகதியை சர்வதேச பெண்கள் தினமாக யுனெஸ்கோ பிரகடனப்படுத்தி உள்ளது.. காரணம் இன்றய 21ம் நூற்றாண்டிலும் பெண்கள் சாதாரண மனிதருக்கு வழங்கப்படும் உரிமைகள் அற்றவர்களாக வாழ்கிறார்கள். கல்வியறிவற்றவராகவும் ஆண்களால் உடல் ரீதியாகவும் மனோ ரீதியாகவும் துன்புறுத்தப்படுகின்றவர்களாகவும் பலர் வாழ்ந்து வருகின்றனர். வெளியுலகம் கூடத் தெரியாது சமய சம்பிருதாயம் என வீட்டுக்குள்ளே பூட்டி வைக்கப்படும் துன்பமும் நிகழ்ந்துகொண்டு தான் உள்ளது.
பாரதியாரோ,
‘ஏட்டையும் பெண்கள் தொடுவது தீமை
யென்றெண்ணி இருந்தவர் மாய்ந்து விட்டார்
வீட்டுக்குள்ளே பெண்ணைப் பூட்டி வைப்போமென்ற
விந்தை மனிதர் தலைகுனிந்தார்’
என்று பாடி இன்று 80 வருடங்களுக்கு மேலாகியும் இன்றும் உலகில் இந்தக் கொடுமைகள் நடந்த வண்ணமே உள்ளது. பெண்களின் விசேஷ கொண்டாட்டமாகக் கொள்ளப்படும் இந்த நவராத்திரி நாட்களை நாம் ஏன் பெண்கள் தம் நிலையை; திறமையை; பலத்தை உணரவைக்கும் காலமாகக் கொள்ளக் கூடாது?
பாரதி வாக்கில்,
‘ பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும்
பாரினில் பெண்கள் நடத்த வந்தோம்
எட்டும் அறிவினில் ஆணுக்கிங்கே பெண்
இளைப்பில்லை காண் என உயர்ந்து விட்ட பெண்ணினம்’
என்பதற்கிணங்க தான் மட்டும் வாழ்ந்தால் போதும் என்று இருந்து விடாது தன் சக இனத்துக்காகக் குரல் கொடுக்கவும் போராடவும் துணியும் போது தான் இந்த பரந்த உலகில் அல்லலுறும் பெண்களைக் காப்பாற்ற முடியும்.
இந்தச் சமய நூல்கள் கூறுவது மகிஷன் உலகுக்கிழைத்த கொடுமையில் இருந்து மக்களைக் காக்க பார்வதியே மாகாளியாகிறாள் என்பதாகும். கைகளிலே சூலம், சக்கரம், வாள் அம்பு வில்லு என்பன சகிதமான ஆயுத தாரியாக மகிஷனைத் தாக்க அவள் புறப்படுகிறாள். ஒன்பது நாள் நீண்ட யுத்தத்திலே கண்களுக்குப் புலப்படாத அந்த அரக்கனை அவள் கொல்கிறாள்.
பெண் அடிமை என்பதும் வெளிப்படையாகக் கண்ணுக்குப் புலப்படாத அரக்கனே. மதம், சம்பிருதாயம், கலாசாரம் என்ற போர்வையிலே பெண்களுக்குக் கொடுமைகள் இழைக்கப்படுகின்றன. தம் இனத்துக்கு இழைக்கப்படும் கொடுமையில் இருந்து அவர்களைக் காப்பாற்ற ஒவ்வொரு பெண்ணுமே மாகாளியாக வேண்டும்.
புறப்படுங்கள் பெண் இனமே புறப்படுங்கள்!
( இக் கட்டுரை ATBC வானொலியில் ‘பண்பாட்டுக் கோலங்கள் நிகழ்ச்சிக்காக ........திகதி ஒலிபரப்பானது)

எங்கள் வேர்
இன்று எமது வாரிசுகள் ஒரு புதிய சூழலில் வளர்கிறார்கள்.பெரும்பாலும் இவர்கள் தமது பாரம்பரியத்தை அறியாதவர்கள். பிறநாட்டில் நாம் அந் நாட்டு பிரஜைகளாக வாழ்ந்த போதும் அந் நாட்டவரோ எம்மை வந்தேறு குடிகளாகவே கருதுகிறார்கள். இதனால் எமது இளம் சிறார்கள் முற்றுமுழுதாக இந்த நாட்டவர்களுக்கு இருக்கும் சுதந்திரத்துடன் வாழ்கிறார்களா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.
ஆமாம், சுதந்திரம் என்பது மனோரீதியாக இவர்கள் தாம் எந்த நாட்டவருடனும் சரிநிகர் சமானமாக நிற்கக் கூடியவர்கள் எனக் கருதுவதை உள்ளடக்கி நிற்கிறது. பல இளம் தலைமுறையினர் இந்தக் கறுப்புப் பெற்றோருக்கு பிறந்து நாம் அல்லல் பட வேண்டி உள்ளதே எனப் புளுங்கத்தான் செய்கிறார்கள். காரணம் நம் பாரம்பரியம், நாடு யாவும் அடிமைப்பட்ட பூர்வீகம் உடையது என்ற அவர்களின் மனதில் ஆழ வேரூன்றிப் போயுள்ள எண்ணமே. தொழில்நுட்ப விஞ்ஞான அறிவில் முன்னேறியது மேற்கு நாடுகள். எம்மவரோ எதையும் அறியாதவர் என அவர்கள் ஆழமாக நம்புகிறார்கள்.
இந்தப் பின்னணியில் அவர்களுக்கு நமது சரியான பூர்வீகத்தை அறியத் தருவது நமது கடமையாகும். இதன் மூலம் அவர்கள் தமது பூர்வீகம் சிறந்த பின்னணியில் அமைதிருப்பதை அறியும் போது தாழ்வு மனப்பாண்மையை விடுத்து சிறந்த ஒரு பூர்வீகத்தின் வாரிசுகள் என்ற பெருமிதத்துடன் வாழ முடியும். இதை அறிந்து இவைகளை அவர்களுக்கு எடுத்துக் கூற வேண்டியது நமது கடமையாகும்.
இன்று எமது பண்பாட்டின் சின்னமாக ஓங்கி நிற்பது கோயிலும் கோயில் கோபுரங்களும். இவை வழிபாட்டுத் தலங்களாக மட்டும் அன்று நிலவவில்லை. இந்தக் கோயில்கள் நாடக அரங்காகப்; பல கலைகளின் இருப்பிடமாக அமைந்திருந்தது. ஏன் வங்கிகளாகக் கூட அவை இயங்கின. கடன் கொடுக்கவும் வட்டி வாங்கவும் கூடச் செய்தன. மொத்தத்தில் அரச பரிபாலனமே கோயிலை மையமாகக் கொண்டு இயங்கியது எனலாம்.
இந்த உயர்ந்த கோயில்களை கட்டுவதற்கான அறிவும் அவர்களிடம் இருந்தது. இதன் அறிவுக் கருவூலம்’ சிற்பசாஸ்திரம்’ என அறியப்பட்டது. இத்தகைய கட்டிடங்களைக் கட்டி எழுப்ப வேண்டிய கணித அறிவும் அவர்களிடம் இருந்தது. கணிதத்தின் பகுதிகளான Geometry, Algebra, Square roots, Fraction யாவற்றையும் அவர்கள் நன்றாக அறிந்திருந்தார்கள்.
புகழ் பெற்ற இந்தியக் கணித மேதை ஆரியப்பட்டர் வானியல் நிபுணராகவும் இருந்தார். கிரகங்களின் வழியாக தோன்றும் நாளை வெகு துல்லியமாகக் கணித்துக் கூறினார். இவரது காலம் கி.பி. 476 ஆகும். இது கலிலியோவிற்கு முற்பட்ட காலம். ஆரியபட்டருக்கு பல காலங்களுக்கு முன்பே இந்தியக் கணிதத்தில் சைபர் - அது தான் பூச்சியம் வந்து விட்டது. இந்தச் சைபரைக் கணிதத்தில் புகுத்தியவர் இந்தியரே.
பொறியியல் துறையில் நாடு மிகவும் முன்னேறி இருந்தது. துருப்பிடிக்காத உலோகங்களின் சேர்க்கை அது தான் Steel கி.பி. 5ம் நூற்றாண்டிலேயே பாவனைக்கு வந்து விட்டிருந்தது. டெல்லிக்கு அருகாமையில் அமைந்துள்ள குதும்மினார் ( Qutub Minar )கோபுரத்துக்கு அருகாமையில் காணப்படும் உலோகத் தூண் கி.பி. 4ம் நூற்றாண்டுக் காலத்தயது. இன்றும் அது சிறிதும் துருப்பிடிக்காது காணப்படுகிறது. இந்த உலோகத்தூண் இன்றும் விஞ்ஞானிகளை வியக்க வைக்கிறது.
சுஸ்ருத சமிஹித்த ( Susruta Samhita ) என்னும் நூல் ஆயுள் வேத வைத்திய முறைகளை மட்டும் குறிப்பிடவில்லை. பலவகையான சத்திர சிகிச்சை முறைகளும் இதிலே குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் மருந்துகளின் தன்மை விரிவாக ஆராயப்பட்டுள்ளது. விஷங்களும் அவற்றின் குணங்களும் அவற்றைக் கையாளும் வழிமுறைகளும் அவற்றில் விளக்கப் பட்டுள்ளன. காது, தொண்டை, மூக்கு பற்றி விரிவாக ஆரய்வதுடன் பல வைத்தியங்களைப் பற்றிய தனித்தனியான பிரிவுகளும் இதில் உள்ளன.
பதஞ்சலியின் யோக சூத்திரம் பல ஆயிரம் வருடங்களுக்கு முன் தோன்றியது. இது மனித மனதைச் சரியாக வழிநடத்த வழிவகைகளைக் கூறுகிறது. முறையான சுவாசம், உடற்பயிற்சி, தியானம் போன்றவற்றின் ஊடாக மனிதனை உன்னத நிலைக்குக் கொண்டுவர முடியும் என்பதைப் பயிற்சி மூலம் நிரூபித்தார்கள். அதுவே இன்று உலகப் புகழ் பெற்ற யோகா அப்பியாசம்,( Yoga) தியானம் ( Meditation) ஆக விளங்குகிறது. இதன் அருமை பெருமைகளை மேலைத்தேயத்தவர்கள் நன்றாக உணர்ந்துள்ளார்கள்.
இத்தனை இருந்தும் பிற்பட்ட காலத்தில் நாம் ஏன் முன்னிலைக்கு வரவில்லை என்பது ஆராய வேண்டிய ஒன்றே. உடல் மெய்யானது என்னும் பொழுது தான் உடல் பற்றியும் அதனை மேன்மைப்படுத்துவது பற்றியும் ஆராய்ச்சிகள் எழும். இடைக்காலத்திலே இந்த உடல் பொய்யானது என்ற தத்துவம் பரவத்தொடங்கியது. இந்த உலகே மாயம் என்னும் பொழுது இந்த மாயையை விடுத்து அப்பால் தத்துவத்திலும் அதை ஆராய்வதிலும் எம்மவர் நேரத்தை வீணடிக்கத் தொடங்கி விட்டார்கள்.
அறிவு என்பது பலவிஷயங்களில் பொதிந்துள்ள உண்மையைத் தேடுவதற்கான ஆய்வு. அந்த ஆய்வுகளின் முடிவே சமூக முன்னேற்றத்திற்கு உதவுவது. நாம் வாழும் உலகே மாயமானது; உடல் என்பது பொய்யானது என்ற எண்ணம் வரும் பொழுது நம்மால் பார்த்து உணர முடியாத ஒன்றில் மக்கள் மனதைச் செலுத்தியதால் அறிவு வளர்ச்சிக்குப் பதில் அறிவு எம்மை விட்டு நழுவி விட்டது. வாழாமல் தேக்க நிலைக்குத் தள்ளப்பட்டு விட்டோம்.
( இக் கட்டுரை ATBC வானொலியில் ’பண்பாட்டுக் கோலங்கள்’ என்ற நிகழ்ச்சியில் .............திகதி ஒலிபரப்பாகியது.)

புத்தகங்களின் அறிமுகம்
அன்புடையீர்,
காலம் தோறும் நாட்டியக் கலை, தமிழர் வளர்த்த ஆடற்கலைகள், மற்றும் இந்திய நாட்டியத்தின் திராவிட மரபு ஆகிய என்னுடய மூன்று நூல்கள் எதிர் வரும் மார்ச் மாதம் இரண்டாம் திகதி மாலை ஆறு மணிக்கு வைகாசிக் குன்றில் வீற்றிருக்கும் முருகப் பெருமானின் ஆலய பின் முற்றலில் அமைந்திருக்கும் கலாசார மண்டபத்தில் அறிமுகம் செய்யப்பட இருக்கின்றன.
திராவிடத் தமிழுக்கும் நாட்டியக் கலைக்கும் பண்பாட்டு விழுமியத்துக்கும் புதிய வெளிச்சத்தைத் தரும் இவ் ஆய்வு நூல்களின் அறிமுக நிகழ்வில் நீங்கள் எல்லோரும் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளுகிறேன்.
நன்றி.
Subscribe to:
Posts (Atom)